மணிமேகலை பிரசுரம், 7(4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 132)
பகைவர், விரட்டி வந்தபோதும் பதட்டம் அடையாமல் `இறைவன் காப்பாற்றுவான்' என்ற மன உறுதியோடு இருந்த நபிகளாரின் வரலாற்று நிகழ்ச்சி, `நம்பிக்கையே காமதேனு; நம்பினோர் கெடுவதில்லை' என்ற தத்துவத்தை விளக்குகிறது என்று பாரதியார் ஒரு சொற்பொழிவில் கூறியுள்ளார்.
பாரதியார் தமது முஸ்லிம் நேசத்தை வெளிக்காட்டியது இரு வழிகளில். ஒன்று, இதழியல் வாழ்க்கையில். மற்றது மேடைகளில்...
இந்நூலில் 10 அத்தியாயங்களில் பாரதியாரின் முஸ்லிம் நேசம் நயம்பட சிறப்புற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புதிய கோணத்தில் செய்யப்பட்டுள்ள வித்தியாசமான பயனுள்ள ஆய்வு நூல்.