இன்றைய விவசாயம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சக்கம். இவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்தும் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. தவிர, செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் நிலம் பாழாகிறது. வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் என்ன தீர்வு? செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா? பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித் தருகிறார்.