பா. ராகவன் இராக்கின் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும்கூட. 24 வருடங்கள் அந்த தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.
தாய் வயிற்றில் சிசுவாக உருவான நாள் தொடங்கி, சதாம் மரணத்தின் சொந்தக்காரர். இரான் யுத்தம், குவைத் போர், வளைகுடாப் போர் என்று சதாமின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு அட்சரமும் ரத்தத்தால் எழுதப்பட்டவை. தனது அரசியல் கனவுகளுக்காக இராக்கியர்களையே அவ்வப்போது பலி கொடுக்கத் தயங்காத மனிதாபிமானமற்ற சர்வாதிகாரி அவர்.
மறுபுறம், சிதைந்துக் கிடந்த இராக்கை மறுகட்டுமானம் செய்த ஓர் அற்புத சக்தியாகவும் சதாமைப் பார்க்க முடியும். கட்டாயக் கல்வி, கிராமப்புற வேலை வாய்ப்புகள், மதச்சார்பற்ற ஆட்சி நிர்வாகம் என்று தன்னை நினைவுகூர,பல நல்ல காரியங்களும் செய்தவர்.
இதனால்தான் சதாம் ஹுசைனை ஒரு ஹீரோவாகவோ,வில்லனாகவோ உடனடி முத்திரைகுத்த முடிவதில்லை.
சதாம் ஹுசைன் என்கிற ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் அசத்தலான நடையில் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கில் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும் கூட இந்நூல் விவாதிக்கிறது.