முகப்பு » அரசியல் » ஜமா இஸ்லாமியா

ஜமா இஸ்லாமியா

விலைரூ.60

ஆசிரியர் : பா.ராகவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: அரசியல்

Rating

பிடித்தவை
தென் கிழக்காசியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய போராளி இயக்கம் ஜமா இஸ்லாமியா. அல் காயிதாவின் கிழக்காசிய நெட் ஒர்க்கை அமைத்துத் தந்ததே இவர்கள்தான். அவர்களுடைய 9/11 அமெரிக்கத் தாக்குதலில் ஜமாவின் பங்கு கணிசமானது.

இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து - எங்கே வேண்டுமானாலும் போய், யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து நீங்கள் அதிகம் அச்சப்படும் விஷயம் எது என்று கேட்டுப்பாருங்கள். உடனடி பதில் 'ஜமா இஸ்லாமியா' என்பதாக இருக்கும்.

ஜமாவின் பாலி குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியவை. அல் காயிதாவின் ஆள்களை கிழக்காசியாவுக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்து, சில பயிற்சிகளையும் அளித்து மாபெரும் தாக்குதல்களுக்கு அவர்களைத் தயாரித்து அனுப்பும் அளவுக்கு வலுமிக்க இயக்கம் ஜமா.

உலகம் முழுவதிலுமிருந்து இந்த இயக்கத்துக்கு நிதி வருகிறது. எங்கெங்கிருந்தோ ஆயுதங்கள் வருகின்றன. மேற்கொண்டு தேவைகளுக்கு பக்காவாக பிசினஸ் செய்கிறார்கள். முதலீடுகளை கவனிக்கத் தனிப்பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். சற்றும் புரிபடாததொரு சூட்சும நெட் ஒர்க்கின் சூத்திரதாரியாக இருக்கிறார்கள்.

ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு, ரத்தத்தை உறையவைக்கும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறது ஜமா. அத்தனையும், அத்தனையும் இந்தப் புத்தகத்தில்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us