பவன் குப்தா,அனுராதா ஜோஷி,கீதா தரம்பால் - ஃப்ரிக்,தமிழில்: எம்.ஆர். ராஜகோபால்
மகாத்மா காந்தி அமரராகி 58 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் காந்தியைப் பற்றி மக்கள் பேசுகின்றனர். காந்தியின் சிந்தனையைப் பற்றி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. காந்தியின் கருத்துகளுக்கு இன்றைய மனித சமுதாயத்திடையே, குறிப்பாக இளைய சமுதாயத்திடம் பெரிய வரவேற்பு உள்ளது.
கல்வி, கிராமப்பணி, தொழில்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியாவின் அரசியல், சமூக அமைப்பு, இந்திய நாகரிகம், நவீனத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி காந்திஜியின் எண்ணங்களும் கருத்துகளும் அவரது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும், கடிதங்களிலும், குறிப்புகளிலும் சிதறிக்கிடக்கின்றன.
அவற்றை எளிமையாகவும் தெளிவாகவும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும்.
காந்திஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த பல்வேறு அரிய புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.