விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில், எளிய நடையில் பசுமை விகடன் இதழில் மண்புழு மன்னாரு என்ற பெயரில் எழுதிவருகிறார் பொன்.செந்தில்குமார். அர்த்தசாஸ்திரம், விருஷ ஆயுர்வேதம், மாட்டு வாகடம்... என நூற்றாண்டு பழமை வாய்ந்த நூல்களில் இருந்தெல்லாம்கூட விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான தொழில்நுட்பச் செய்திகளை திரட்டியிருக்கிறார். பாட்டன், முப்பாட்டன் சொல்லி வைத்த, செவி வழியாகவே உலாவிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும்கூட அவர் விட்டுவைக்கவில்லை.
இந்த தொழில்நுட்பச் செய்திகள், எளிமையான வார்த்தைகளில், நறுக்குத் தெறித்தாற்போல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பு.
‘பசுமை விகடன்’ ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி பலன் பெற்ற வாசக விவசாயிகள், ‘மண்புழு மன்னாரு எப்போ தனிப் புத்தகமாக வரும்?’ என்று தொடர்ந்து கேட்கத் தொடங்கியதன் விளவே, இந்த கையடக்க புத்தகம்!
நிச்சயம், உங்கள் அனைவரின் வரவேற்பையும் இந்த புத்தகம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.