ஸ்ரீநம்மாழ்வார் சபா, 80, வ.உ.சி., தெரு, திருநெல்வேலி-627 006. (பக்கம்: 174)
பெரும்புலவர் தி.கா.இராமாநுசக் கவிராயர் (1905 - 1985) "மகாத்மா காந்தி காவியம் இயற்றிய கவித் தென்றல் ஆவார். சிறந்த வைணவராகவும், ஒழுக்க சீலராகவும் விளங்கிய இவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் ஒன்றான திருமால் நெறியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 57 பாடல்கள் உள்ளன. இவைகள் ஆண்டாளின் திருப்பாவையை நினைவுபடுத்தும் வகையில், "எம்பாவாய் என்று முடிகின்றன. மூல நூலுக்கும் கவிராயரிடம் நெடுங்காலம் பழகும் பேறு பெற்ற இருவர் உரை எழுதியுள்ளனர். நூலின் உரை மிக எளிய தமிழில் அமைந்துள்ளது. ஸ்ரீ கலியன் வானமாமாலை ராமாநுச ஜீயர் சுவாமிகள், பேராசிரியர் பா.வளன்அரசு, முனைவர் சு.வேங்கடராமன் ஆகியோர் அணிந்துரை தந்துள்ளதால் நூலின் சிறப்பு மேலும் கூடுகிறது. அனைவரும் படித்து இன்புறலாம்.