விலைரூ.25
புத்தகங்கள்
வேதநெறி தழைத்தோங்க! மிகுசைவத் துறை விளங்க!
விலைரூ.25
ஆசிரியர் : ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமிகள்
வெளியீடு: காசிமடம்
பகுதி: ஆன்மிகம்
Rating
தமிழகத்துச் சைவ மரபில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, சமஸ்கிருதம், தமிழ் பிணக்கு இருந்து வருகிறது. இதற்கு சமய மற்றும் அரசியல் ரீதியிலான காரணங்கள் பல உள்ளன. எனினும் சமீபகாலமாக, இப்பிணக்கு சமஸ்கிருதம் மீதான பெரும் காழ்ப்புணர்ச்சியாக மாறிவிட்டது. இப்பிணக்கின் ஆரம்பம் எது, இதன் நோக்கம் என்ன, வடமொழி, தமிழுக்கு முற்றிலும் விரோதமானதா, இப்பிணக்கு சைவ சமய வளர்ச்சிக்கு உதவுமா, உண்மையான பின்னணி என்ன என, பல்வேறு கோணங்களில், ஸ்ரீகாசி மடம், திருப்பனந்தாள் திருமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் எழுதிய கட்டுரைகள் இந்நூல்களில் இடம் பெற்றுள்ளன. திருமடத்து வெளியீடான "ஸ்ரீகுமரகுருபரர் மாத இதழில் சுவாமிகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!