விலைரூ.290
புத்தகங்கள்
Rating
பக்கம்: 656
பாரத நாட்டில் ஸ்ரீ ராமாயணக் கதை பல மொழிகளில் எழுதப்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காவியமாகத் திகழ்கிறது. கோஸ்வாமி துளசிதாசர் கி.பி., 1574ல் இந்தி மொழியில் எழுதியுள்ள, "ஸ்ரீராம சரித மானஸ் எனும் காவியம், வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற காவியமாகும். இந்நூலை சொற்சுவை, பொருட்சுவை இரண்டும் இணைந்து, பக்திச் சுவையை ஊட்டும் தன்மை வாய்ந்தவை என்பர்; தமிழ் உரையுடன் தற்போது இந்நூல் வெளிவந்துள்ளது.இந்நூலில், துளசிதாசரின் வாழ்க்கை, அவர் காலப் பின்னணி, அவரின் சமூகப் பார்வை, துளசியின் பக்தி தத்துவம் முதலியன விரிவாககூறப்பட்டுள்ளன.
துளசி ராமாயணத்தின் பால காண்டம் முதல் உத்தர காண்டம் வரையும் உள்ள நிகழ்ச்சிகளை, மிக எளிய நடையில் நூலாசிரியர் கூறிச் செல்வது படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. நூலின் இடையிடையே, நூலாசிரியர் தம் விளக்கங்களை அடைப்புக் குறியிட்டுக் கூறியுள்ளது, அவரின் புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்நூலில் கூறப்பட்டுள்ள, "நவதா பக்தி (பக். 406), ராம நாம மகிமைப் படலம் (பக். 413), நூலாசிரியரின் முன்னுரை (பக். 3), பின்னுரை (பக். 632) முதலியன நமக்குப் பல புதிய செய்திகளைத் தருகின்றன.
நூலின் இடையில் தேவையான இடங்களில், இந்தியில், துளசியின் பாடல் அடிகளைக் கொடுத்துள்ளது, படிப்போர்க்கு இன்பம் அளிக்கும் என்று கூறலாம்.நூலாசிரியருக்கும், வெளியீட்டாளருக்கும் பெருமை தரும் வகையில் நூல் அமைந்துள்ளது. அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!