வைணவ தத்துவம், இதம், புருஷார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த நூல் பலரால் போற்றப்படுகின்றது. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால், எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்களின் கருத்துகளை மேலும் தெளிவாக்க, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எழுதியது தான், ‘ஆசார்ய இருதயம்’. மானிடர் பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்னும், நம்மாழ்வாரின் கொள்கையை வலியுறுத்துவதே இந்த நூலின் நோக்கம்.
டாக்டர் கலியன் சம்பத்து