மனித உடல் இயக்கம், சுவாசத்தின் பல்வேறு நிலைகள், மன நிலை இவைகளை எவ்வாறு அடக்குவது? இந்தக் கேள்விக்கான விடைகளை ஆழ்ந்து சிந்திக்கத்தக்க விஞ்ஞான ரீதியிலும், ஆன்மிக ரீதியிலும் கேள்வி–பதில்கள் மூலமாக இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புராணங்கள், இதிகாசங்கள் போன்றவைகளின் தத்துவங்களை கதாபாத்திரங்களாக்கித் தந்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் புதைந்திருக்கும் மர்மங்களையும், தத்துவ விளக்கங்களையும் இப்புத்தகம் தெளிவாக்குகிறது. யோகத்தில் எதைச் செய்யவேண்டும், ஏன் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை காணும் ஒரு அற்புத விளக்கம்தான் இந்நூல் ஆகும்.