பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு மற்றும் அவை மனித தேகத்தில் செயல்படும் விதம் மற்றும் பிரபஞ்ச இயக்கத்திற்கும், மனித உடம்பிற்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள், மனித சுவாசத்தின் இரகசியம், யோகத்தில் அடைய வேண்டிய சுவாச ஓட்டத்தின் ஒருங்கிணைந்த செயல் முறைகள், ஜீவ பிரம்மத்தின் ஐக்கிய நிலைகள் மற்றும் சர்வ பிரபஞ்ச இயக்கதிற்கே காரணமாக திகழும் உணர்வுபூர்வமான பீஜாட்சரங்கள் என இவை யாவும் முதன் முறையாக விளக்கமான முறையில் இந்நூலில் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. மெய்ஞானத்துடன் உணர்வு பூர்வமாக இணைந்திருக்கும் இயற்கை நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளும் விடும் அறைகூவல்கள் இவற்றையும் அலசுகிறது இந்நூல். யோகத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு அமரகவியின் நூல்கள் ஒரு தீர்வு கண்டுள்ளது இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.