அமரகவி சித்தேஸ்வரர் சம காலத்தில் 1946 முதல் 1966 வாழ்ந்த மகா புருஷர்களுடன் குறிப்பாக திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி, காஞ்சி பரமாச்சார்யார் மகா சுவாமிகள், பாண்டிச்சேரி அரவிந்தர் மற்றும் ஸ்ரீ நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்மம், ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகளுடன் நடந்த ஆன்மிக உரையாடல்கள், சந்திப்புகள் என விவரிக்கப் பட்டுள்ளது. திரு. டி.கே.பி. மகாதேவன், டாக்டர் இராதாகிருஷ்ணன், சர்.சி.வி.ராமனிடம், டாக்டர் வி.வி.கிரி, கவர்னர் திரு. கே கே ஷா, பிரபுதாஸ் பட்வாரி, திரு ஜான், பி.எஸ். கோட்ஸ், திரு. சி.ஆர். பட்டாபிராமன் போன்ற மேதைகளுடன் நடத்திய ஆன்மிக உரையாடல்களும் விரிவான முறையிலும், சுவாரசியமாகவும் சொல்லப்பட்டுள்ளன.