இராமாயணத்தில் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பல நூறு ஆண்டுகளாக எண்ணிலடங்கா ஓலைச் சுவடிகள், வண்ண ஓவியங்கள், கணக்கில்லா சிற்பங்கள் என பல்வேறு வடிவில் வெளி வந்திருந்தாலும், அவை அனைத்துமே கதையின் ஓட்டத்தை தழுவி உள்ளதே அன்றி இராமாயணத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் அழிவில்லாத பிரம்ம சிருஷ்டியின் தத்துவங்களின் அர்த்தங்களை மக்களுக்கு தெளிவாக விளக்கிச் சொல்லப்படவில்லை. அந்த வகையில் அமரகவி இராமசந்திரரின் இந்நூல் மிகவும் வித்தியாசமானது, புதுமையானது. இராமாயணத்தின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இராமாயண கால வரைப்படங்கள், தத்துவங்களின் விளக்கப் படங்கள், மற்றும் இராமாயண கதாபாத்திரங்களை விளக்கும் பல்வேறு தத்துவங்களின் அட்டவணைகள் ஆகியவற்றை தாங்கி இந்நூலின் ‘முதல் பாகம்’ வெளி வந்துள்ளது.