ஆசிரியர்-ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், ய.சு.ராஜன். தமிழாக்கம்-நெல்லை சு.முத்து.வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.நன்கு கற்றால் செயல்திறன் பெறலாம்; செயல்திறத்தால் ஆக்கபூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் அறிவுக்குச் சக்தியாக மிளிரும் அந்த அறிவு நம் வாழ்வை வளமாக்கும்-ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். டாக்டர் கலாம் ஹைதராபாத் நகரில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவுக்குப் பிறகு, தம்மிடம் வந்து கையெழுத்து கேட்ட பத்து வயதுச் சிறுமியிடம், உன் எதிர்கால ஆசை என்ன? என்று வினவினார்.ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவில் நான் வாழ வேண்டும்.எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பதில் வந்தது.அந்தச் சிறுமிக்கும்,அவளது இலட்சிய வேட்கையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்.