ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களை வீட்டுத் தோட்டத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது. வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்வதுடன், ‘டென்ஷனை’ குறைக்கவும், வீட்டுத் தோட்டங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
அதிக செலவில்லாமல், அதீத உழைப்பும் தேவையில்லாமல், குறைவான இடத்தில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆலோசனைகளை கூறியுள்ளார் நூலாசிரியர். மொட்டை மாடி மட்டுமின்றி, வீட்டு பால்கனியில் கூட செடி வளர்ப்பதற்கான எளிய ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. காய்கறிகள் முதல் அழகு செடிகள் வரை, நவீன முறையில் வளர்க்கும் நுணுக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
இயற்கையான முறையில் உரம், பூச்சி விரட்டி தயாரிப்பு முறை விவரிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டம் மட்டுமல்லாமல், வெட்டிவேர் வளர்ப்பு, சிறுதானியங்கள் பயன்கள், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியத்தையும் விவரிக்கிறார்.
– ஜே.பி.,