விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளில் தலையாயது பூச்சிகள். பாடுபட்டு வளர்த்த பயிரையும், மகசூலையும் பதம் பார்க்கும் பூச்சிகள் விவசாயத்திற்கு எதிரிகளாகத் தான் இருந்து வருகின்றன. அவற்றிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காகவே அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும், பூச்சிகளை கொல்கிறதோ இல்லையோ, கட்டாயம், தானியங்களையும், காய்கறிகளையும் சாப்பிடும் மக்களையும் பதம் பார்க்கிறது. இதற்கு மாற்றாக தான், இயற்கை வேளாண்மையில், பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பூச்சி விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதைப் பற்றி விரிவாக இந்த நூலில் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி பயிர் வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யா போன்றவற்றை எளிமையாக தயாரிக்கும் முறையையும் கூறியுள்ளனர். நவீன வேளாண்மையின் பின்னணியில், இயற்கை விவசாயத்தை அணுகும் முறை விவரிக்கப்பட்டுள்ளது.
ஜே.பி.,