ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது காங்கேயம் காளைகள் தான். விவசாயம் குறைந்து, வண்டிகளும், ஏர்களும் காணாமல் போன பின், காளைகளின் தேவையும் குறைந்து போனது. அதன் விளைவு இப்போது காங்கேயம் காளைகளும் காணாமல் போய் வருகின்றன. காங்கேயம் காளைகள் தோற்றம், அவற்றின் வரலாறு, சிறப்பு, உள்ளிட்டவற்றை நூலாசிரியர் விளக்குகிறார். காங்கேயம் மாடுகளை வளர்க்கும் முறை, அவற்றை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது பற்றியும் விளக்கியுள்ளார்.
காங்கேயம் மட்டுமின்றி, மணப்பாறை, உம்பளச்சேரி, புலிக்குளம் போன்ற மற்ற வகை மாடுகளும், காங்கேயம் மாடுகளின் கிளைகள் தான் என்கிறார் நூலாசிரியர். அவற்றின் உடல் அமைப்பு மற்றும் பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்.
அதுபோலவே தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு பசுக்கள் பற்றியும், அவற்றின் பாலின் தன்மை பற்றியும் விவரிக்கிறார். இயற்கை விவசாயத்திற்கு முக்கிய தேவையான, பாரம்பரிய மாடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜே.பி.,