அமித் பாதுரி, தமிழாக்கம் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.
இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அறுபதாண்டுகள் ஆன பின்னும், இந்திய மக்களில் பெரும்பான்னையினர் மிகவும் கேடான வறுமையில் உழல்கின்றனர். பொருளாதாரத் தாராளமயமும். தொடர்ந்து அரசு தனது பணிகளைச் சுருக்கிக் கொள்வதும் தான் இப்பிரச்சினைக்குத் தீர்வா? இந்தியாவின் முன்னணி கோட்பாடுப் பொருளியல் நிபுணர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், அது தவறான வழி என்று உறுதியாக, எளிய நடையில் எடுத்துரைக்கிறார். சர்வதேச நிறுவனங்கள், ஊடகங்கள், கொள்கை வரைவாளர்கள், பொருளாதாரக் கோட்பாடுகளை நூலின் போக்கிலே ஆசிரியர் தகர்த்தெறிகிறார். குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியத்துடன் கூடிய முழுவேலை வாய்ப்பை குறுகிய காலத்திற்குள் உருவாக்குவது சாத்தியமே என்று இந்நூல் விளக்குகிறது.