சினிமாவுக்கும், வீடியோவிற்குமான, இந்தத் தொழில்நுட்பக் கலைநூல், இந்த இரண்டு ஊடகங்களையும் கற்றறிந்து செயல்பட எண்ணும் தமிழ் இளைய தலைமுறைக்கு ஒரு வரப்பிரசாதம்! தனித்தமிழ் அன்பர்கள், ‘சினிமா’வை, திரைப்படம் என்று சொல்லி மகிழ்ந்தனர். அதன் பின் வந்த, ‘வீடியோ’வை எப்படி தமிழ்ப் பெயரால் அழைப்பது என்று கொஞ்சம் மூளையைக் கசக்கினர். அதன் விளைவாகப் பிறந்த செல்லப் பெயரே, ‘சின்னத்திரை’ என்பது. திரைப்படம் அம்மா; அந்த அம்மா ஈன்ற செல்ல மகள் சின்னத்திரை. ஷாட் வகைகள், கேமரா கோணம், ஒளியமைப்பு, காட்சியமைப்பு, கேமரா நகர்வுகள், தொடர் ஷாட்டுகள், இவை பற்றி நன்கு விளக்குகிறார். வெகு வேகமாக மாறி வருகிற சின்னத்திரை தொழில்நுட்பங்களில், மிக சமீபத்திய டிஜிட்டல் புரட்சியால் உருவான நுட்பங்களைப் பற்றியும் வாசகர்களுக்கு ஆசிரியர் விளக்குகிறார்!
எஸ்.குரு