முதல் கதையில் ஆரம்பமான வேகத்தை கடைசி கதை வரை கொண்டு சென்றிருப்பது இன்னும் சுவாரசியம். ‘வாழ்க்கை, துாய்மை, ஓடுகாலி, பிச்சைக்காரி’ உள்ளிட்ட கதைகள், ஒவ்வொரு விதமாய் நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ‘ஜனனமும் மரணமும்’ கதை நெஞ்சை வருடுகிறது என்றால், ‘மனைவி’ கதையானது முகத்தில் அறைகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருப்பது, நுாலாசிரியரின் திறமையைக் காட்டுகிறது.