பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல். இந்த உடல் இயக்கத்திற்கு, காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர் வாக்கின் படி, காற்று மிகவும் இன்றியமையாதது.
காற்றை யோக முறையில் செயல்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எட்டு வகை யோக முறைகளை விரிவாகப் பேசுகிறது. மெய்ஞானிகள் என்று துவங்கி, நல்ல மொழிகள் என்ற எட்டு தலைப்புகளுடன் நுால் நிறைவெய்துகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார், அவ்வையார் போன்ற சித்தர்களின் கருத்தை உள்வாங்கித் தந்துள்ளார். வாசி யோகம் பற்றி விரிவாக விளக்குகிறது.
– புலவர் இரா.நாராயணன்