ஊடக சட்டங்கள் மற்றும் அறங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம், 16 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் புரியும் வகையில், குறுந்தலைப்புகளில் நேரடி அடுக்கமைவு முறையில் தகவல்கள் அமைந்துள்ளன.
ஊடகம் பற்றி மகாத்மா காந்தியின் பொன்மொழியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, நான்காவது துாண், இந்தியாவில் ஊடக சுதந்திரம் போன்ற விபரங்கள் தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயே ஆட்சியில் ஊடக சுதந்திரம் தனி இயலாக உள்ளது. ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை, மனித உரிமை மற்றும் அறம் சார்ந்து அலசியுள்ளார் ஆசிரியர். அவை பற்றி விரிவாக தகவல்கள் உள்ளன.
இந்திய ஊடக சட்டப்பிரிவுகள், அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் பற்றி எல்லாம் நுட்பமாக சட்டப்பிரிவுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடகமும் அவதுாறும், ஊடக ஒழுக்க நெறிமுறைகள், சிறுவர் செய்திகளில் ஊடக அறம் பற்றி எல்லாம் சமூகவியல் பார்வையுடன் எழுதப்பட்டு உள்ளது. சட்ட ரீதியாக ஊடக செயல்பாடுகள் பற்றி அறிய உதவும் நுால். மாணவர்களுக்கு, விலையில் சலுகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
– அமுதன்