புத்தர் முதல் ஓஷோ வரை, 27 அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புதிய நோக்கில் தரும் நுால். புத்தருக்கு உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்பதை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
எல்லாம் தெரிந்தவராக அறியப்படும் சாக்ரடீஸ், ‘ஒன்றும் தெரியாது’ என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்தியவர் என்ற உண்மையை விளக்குகிறது.
சமத்துவச் சிந்தனையாளராக இயேசு கிறிஸ்துவைக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் சொன்ன பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் முத்திரை வாசகத்தைப் பிறப்பால் எல்லாரும் ஒன்று தான் என்று பரப்பியவர் அமெரிக்க அறிஞர் தாமஸ் ஜெபர்சன். இந்த உண்மை சார்ந்து, அவரது அந்தரங்க வாழ்வியலையும் குறிப்பிட்டுள்ளார்.
கலை இலக்கிய உலகில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விக்டர் யூகோ, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்கள் வாழ்வியலை, தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள்- எளிமையாக விளக்கும் கையேடு.
– முகிலை ராசபாண்டியன்