கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஈரான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெரும்பான்மையினராகவும் கிறிஸ்துவர்களும் ஹிந்துக்களும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.
இவ்வாறு சிறுபான்மையினராக வாழுகிறவர்களுக்கான உரிமைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களுள் ஒன்று இஸ்லாமிய சட்டம். கீழ்ப்படியுங்கள் என்னும் அடிப்படையைக் கொண்டு நாடு, மொழி, இனம் என்னும் பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் உருவாக்கப்பட்டவை இச்சட்டங்கள்.
பதினான்கு தலைப்புகளில் முஸ்லிம் மக்களுக்கான வாழ்வு உரிமையை எடுத்து உரைக்கிறது. பின்னிணைப்பாக ஐரோப்பா, ஆப்ரிக்கா பகுதிகளில் முஸ்லிம்களின் சிறுபான்மையை உணர்த்தும் எண்ணிக்கையையும் பட்டியலிடுகிறது. முஸ்லிம்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறுபான்மை சட்டம் பற்றிப் புரிந்து கொள்வதற்கும் துணைபுரியும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்