சொத்து உரிமையில் அனுபவ பாத்தியம் பற்றி கூறும் நுால். அனுபவ பாத்தியம் கோருவோர், உரிய உரிமையாளருக்கு தெரிந்து அனுபவிக்க வேண்டும். அனுபவிப்பவர் தன் நிலம் போல பாவிக்க வேண்டும். வாடகையோ, குத்தகையோ 12 ஆண்டுகளுக்குள் கொடுத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அவ்விடம் அனுபவத்தில் இருந்திருக்க வேண்டும்.
இப்படி எண்ணற்ற நிபந்தனைகள் அனுபவ பாத்தியதைக்கு இருக்கின்றன. புறம்போக்கு நிலத்தில், அனுபவத்தை வைத்து நேரடியாக பட்டா கேட்டு வாங்க முடியும். ஆனால், தனியார் நிலத்தில் உரிமை கோரினால், நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் தந்து நிரூபிக்க வேண்டும்; அதிகாரிகளிடம் நிரூபிக்க முடியாது.
அனுபவ பாத்தியம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள், சட்டம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்