கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையை அலசி, முன்னேற்றத்துக்கு உகந்த கொள்கைகளை வகுக்கும் கருத்துக்களை கொண்டுள்ள நுால். முக்கிய அறிஞர்களின் கருத்துக்களை தாங்கியுள்ளது.
கோவிட் காலத்தில் பொருளாதார கொள்கை என்ற தலைப்பில் தொகுப்பாசிரியரின் கட்டுரை முதலில் அமைந்துள்ளது. நுால் பற்றிய பரந்த பார்வையை அது தருகிறது. தொடர்ந்து, ஏழு பகுதிகளாக கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்திய அளவில் புகழ் பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பொருளாதார நிலை குறித்த அலசல்களைக் கொண்டு, தீர்வுகளை முன்வைக்கின்றன. பல துறை சார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளன.
வேளாண்மை, நீர் பாசனம், வேலைவாய்ப்பு, வர்த்தகம், தொழில் என பல துறை சார்ந்த புள்ளி விபரங்களைக் கொண்டு ஆராயப்பட்டு உள்ளது. தீர்வுக்கான முன் முயற்சியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி தமிழில் வெளிவந்துள்ள முக்கிய நுால்.
– ஒளி