சித்தர்களின் அற்புதச் செயல்கள் குறித்து பேசும் நுால். திருமூலர் தொடங்கி காகபுசுண்டர் வரை சிறப்பான பாடல்களை விளக்குகிறது. சித்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதச் செயல்களையும் பதிவு செய்துள்ளது. சித்தர்கள் அஷ்டமா சித்தி கைவரப் பெற்றவர்கள் என்றும், அதை உலக நன்மைக்கு பயன்படுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் உருவ வழிபாட்டை வெறுத்தவர்கள்; உள்ளத்தில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்ற கோட்பாடு உடையவர்கள். திருமூலர் அருளிய, 50 பாடல்களை தந்து தெளிவுரையும், ஆராய்ச்சி உரையும் தந்திருப்பது வாசிப்பை ஊக்கப்படுத்துகிறது.
பட்டினத்தார் வாழ்வு, அவர் அன்னைக்கு தீ மூட்டியது, திருவொற்றியூரில் சிவலிங்கமாய் வெளிப்பட்டது எல்லாம் தரப்பட்டுள்ளது. சித்தர்களை பற்றி அறிந்து கொள்வதற்கும், பாடல்களின் ஆற்றலை அறிவதற்கும் துணை செய்யும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்