வாழ்வில் நன்மை, தீமை விளைவது கர்மாக்களைப் பொறுத்தது என்பதை வரலாறு மற்றும் புராண நிகழ்வுகள் மூலம் விளக்கும் நுால். ஞானியரை அவமதித்தல், சான்றோர் வார்த்தைகளை உதாசீனப்படுத்துதல், கொலை போன்ற பாதகச் செயல்களைச் செய்தல், பொய்யுரைத்தல் போன்றன சாபங்களை ஏற்படுத்துகின்றன என்கிறது.
கொலை, களவு உட்பட 10 குற்றங்களில் ஈடுபடுவோர் கீழான பிறவிகளை எடுப்பர் என மணிமேகலையின் அறிவுறுத்தல் விளக்கப்பட்டுள்ளது. தசரதன், அகலிகை பெற்ற சாபம் முதல் உத்தரமேரூர் மற்றும் பனஞ்சாடி கிராமத்துக்கு ஏற்பட்ட சாபம், ஜமீன் பரம்பரை, மருது பாண்டியர் எனப் பலர் பெற்ற சாபங்களும் அதற்கான காரணங்களும் தரப்பட்டுள்ளன.
வாழ்வியல் பிரச்னைகள் தீர ஓத வேண்டிய திருப்பதிகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆன்மிக சிந்தனையை வளர்த்து மக்கள் வாழ்வை மேம்படுத்த உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்