வாழ்வின் பல நிலைகளை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இலங்கை மற்றும் தமிழகத்தை களமாக கொண்டது.
மருத்துவ துறையில், மனிதாபிமானம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என, மனுஷன் கதை சொல்கிறது. அன்றாடம் சந்தித்தும், கூர்ந்து கவனிக்காமல் செல்லும் மனிதர்களை காட்டும் சுடலைஞானி கதை, மனதில் ஈரத்தை ஏற்படுத்துகிறது. போர்க்கால துயரங்களையும், சமூக சீர்கேட்டையும் தொட்டு செல்ல தவறவில்லை. குறிப்பாக, ஜகமே தந்திரம் கதை, போரில் துயர்படிந்த பக்கங்களை கிழித்து தொங்க போடுகிறது.
மத நிறுவனங்களில் நடக்கும் பித்தலாட்டங்கள், ஒதுக்கும் கொள்கையை சுட்டிக்காட்டி, ஏழைகளிடம் தான் இறைவன் குடியிருப்பான் என உணர்த்துகிறது.
– -டி.எஸ்.ராயன்