நாட்டு நடப்புகளை விவரிக்கும் கவிதை தொகுப்பு நுால். கல்வியின் நோக்கம் மாணவர் அறிவாற்றலை அளக்கும் கருவியாக இல்லாது படைப்பாற்றல், நல்லொழுக்கத்தை அளக்கும் கோலாக மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மனித நேயம், பகுத்தறிவு, எதிர்பார்ப்பு ஏதுமில்லா உழைப்பு, சமத்துவம், கொடை பண்பு, நற்சிந்தனை, நல்லொழுக்கம் போன்ற நற்குணங்களே, ஒரு மனிதன் என்னவாக இருக்கிறான் என்பதற்கான அளவுகோல் என்கிறது.
இதயத்தில் நல்லெண்ணம் எப்போதும் வற்றாத ஜீவநதியாய் பாய வேண்டும் என்கிறது. நட்பு என்பது துன்பத்தில் கைவிடாமல் இருப்பது மட்டுமல்ல; இன்பத்தில் மூழ்கிய போதும் கை துாக்கி விடுவதை உணர்த்துகிறது. கவிதைகளில் கருத்துக்களை சொல்லும் நுால்.
–வி.விஷ்வா