அறிவியல் ரீதியாக தியானம் செய்வதை கற்பிக்கும் நுால்.
மருந்தில்லா மருத்துவ சிகிச்சை பெற வழி காட்டுகிறது. எதிர்மறை எண்ணங்கள், பாவச் செயல்கள், கேடு, தீமை தரும் செயல்கள் மனதை விட்டு அகல வழி காட்டுகிறது. ரத்தம் சுத்தம் அடைய, நோய் எதிர்ப்பு திறன் சீரடைய, உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெற வழிமுறைகளை தருகிறது.
பிரபஞ்சம் எவ்வாறு உருவானது. உலகில் திட, திரவ, வாயு பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. அண்ட கோளங்கள் பற்றிய அறிவியல் கருத்துக்கள், பூமி எவ்வாறு தோன்றியது போன்ற விளக்கங்கள் உள்ளன. விஞ்ஞான விழிப்புணர்வு வாழ்வை வளப்படுத்தும் என்கிறது. அறிவியல் ரீதியாக விடைகள் தரும் நுால்.
-–- புலவர் சு.மதியழகன்