நடைமுறை பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் முக்கியத்துவத்தை கூறும் நுால். பாரம்பரிய இயற்கை உணவு வகைகள், சமூகத்தில் நிலவும் பழக்கங்களை எடுத்துக்காட்டுகிறது. முன்னோர் சொல்லி சென்றவற்றில் அறிவியல் கருத்துகளை ஆழ்ந்து சிந்தித்து எடுத்துக் காட்டுகிறது.
ஆய்வுக்கூடத்தில் ஆராய்ந்து பழக்க வழக்கங்கள் உருவாக்கவில்லை. காலங்காலமாக நடைமுறையில் அறிவியல் சிந்தனைப்படியே உருவாக்கப்பட்டு உள்ளதாக நிறுவுகிறது. பண்டைய இலக்கியம், காவியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் எடுத்துக்காட்டியுள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் வெற்றிலை, வேம்பு, மிளகு, மஞ்சள், மருதாணி, எண்ணெய் குளியல் போன்றவற்றில் உள்ள அறிவியல் பயன்பாட்டு தகவல்களை எடுத்துக் கூறும் நுால்.
– மதி