எளிய உபகரணங்களை பயன்படுத்தி அறிவியல் உண்மைகளை அறிய வழிகாட்டும் நுால். சிறுவர் – சிறுமியர் அறிவியல் செயல்பாடுகளை சுயமாக கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜியோமெட்ரிக் காகித வடிவங்கள், பொம்மைகள், ஏழு வெட்டு துண்டு புதிர், பாட்டில் மூடி போன்றவற்றால் பரிசோதனை செய்யும் வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. புதிர் போல் அமைத்து, செயல்முறையால் அதற்கு விடை தேடும் எண்ணத்தை உருவாக்கும் மாதிரிகள் முழுமையாக தரப்பட்டுள்ளன.
அறிவியல் பரிசோதனைகளை எளிமையாக செய்து அறிவு பெறும் வகையில் மாதிரிகள் அமைந்துள்ளன. விளக்கப்படங்களும், செயல்முறைகளும் சிறுவர்களை கவரும். அறிவியல் உண்மைகளை அறிய உதவும் நுால்.
– மதி