ஹிந்தி மொழியை எளிமையாக கற்பிக்கும் பாடங்களை உடைய நுால். புரியும் வகையில், 30 அத்தியாயங்களாக உள்ளது. இறுதியாக, அத்தியாவசிய தேவைக்கான உரையாடல்களும் தரப்பட்டுள்ளன.
சுயமாக ஹிந்தி மொழியை கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழி எழுத்துகளும், அவற்றின் தமிழ் உச்சரிப்பும் முதலில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும், ஹிந்தி மொழியிலும், அதே உச்சரிப்பு தமிழிலும், தொடர்ந்து தமிழ் மொழியில் பொருளை புரிந்து கொள்ள தக்கதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
நிதானமாக திட்டமிட்டு அன்றாடம் பேச்சு வழக்கில் பயன்படும் வாக்கியங்களும் தரப்பட்டு உள்ளன. அவற்றை உச்சரிக்கும் விதம் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியை எளிதாக கற்றுக் கொள்ள உதவும் நுால்.
– ஒளி