வித்வான்கள் திரட்டிய பழமையான ஜோதிடக் களஞ்சிய நுால். ஜோதிடம் தொடர்பான பாடல்களும் விரிவான உரைகளும் தரப்பட்டுள்ளன.
வேதத்திற்கு ஜோதிட சாத்திரமே கண்களாகச் சொல்லப்பட்டுள்ளது. காலத்தை நுட்பமாக அளந்து காட்டும் அளவு பெயர்களின் குறிப்பு உள்ளது. ஷணம் என்பது எட்டு தாமரை இதழ்களில் ஊசி ஊடுருவும் நேரம், இதன் எட்டு மடங்கு லவம், காஷ்டை, நிமிஷம், துடி, துரிதம், லகு, குரு, காசுபதம் என்பவை பற்றி விளக்குகிறது.
இரு கண்ணிமை கொண்டது கைநொடி. இரு கைநொடி கொண்டது ஒரு மாத்திரை. இரண்டரை நாழிகை 60 நிமிடம்.
நட்சத்திரங்கள், ராசிகள், லக்கினங்கள், விவாக பொருத்தம், யோனி பொருத்தம், வசிய பொருத்தம், பட்சி பொருத்தம் விரிவாக தரப்பட்டுள்ள களஞ்சியம்.
– முனைவர் மா.கி.ரமணன்