ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றி பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு நுால். முருகன் அழகையும், ரத்தினகிரி மலை சிறப்பையும் வியந்து எழுதப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், ரத்தினகிரியில் உள்ளது பாலமுருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மீது கனிந்துருகும் பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது; அந்தாதியாக எழுதப்பட்டுள்ளது. மிக எளிமையாக, ‘அடக்க முடியாமல் ஐம்புலனும் என்னை மடக்கி இழுக்குதே மண்ணில்...’ என்பது போன்ற பாடல்கள் அமைந்துள்ளன. சைவத் திருமுறைகளில் காணும் சிவபரதத்துவம், இறைவனை வேண்டுவதன் அவசியமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தி ஆனந்தம் நிறைந்துள்ளது. எளிய சொற்களிலான அந்தாதி நுால்.
– ராம்