இந்தியா – சீனா இடையே நடந்த போர் தொடர்பான தகவல்களை உடைய வரலாற்று ஆவணமாக திகழும் நுால். போர் நடந்தபோது நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலையை விவரிக்கிறது.
போர் துவங்குவதற்கான காரணங்களையும், அதன் விளைவுகளையும் விளக்குகிறது. அப்போதைய பிரதமர் நேருவின் செயல்பாடுகளை விபரமாக சொல்கிறது. போருக்கு முந்தைய காலத்தில் இருநாட்டு சூழல்களையும் விவரிக்கிறது. போர்க் காலத்தில் அரசு எப்படி முடிவு எடுக்கிறது என்ற விபரங்களை அறியத் தருகிறது. போர் தொடர்பான வரலாற்று ஆவண நுால்.
– விநா