மத்தியில் ஆட்சி செய்த போது காங்கிரஸ் செய்த சாதனைகளையும், பா.ஜ., அரசின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள நுால். தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் நிறைவேறாத வாக்குறுதிகள் என்ற தலைப்பில் துவங்கி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் செயல்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போதைய ஆட்சி குறைபாடுகள் சுட்டப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார நிலவரம் புள்ளி விபரங்களுடன் தரப்பட்டுள்ளது. வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு துறைகளிலும் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பட்டியலிட்டுள்ள நுால்.
– ராம்