உடல் நரம்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தையும், அதில் ஏற்படும் கோளாறுகள், உரிய அறிகுறிகள் குறித்து விபரங்களை தரும் நுால். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
நரம்பு மண்டலத்தில் நோய்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறது. நரம்பை வலுப்படுத்துவதிலும், நோய்களை எதிர்த்து போராடுவதிலும், உண்ணும் உணவின் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
நரம்பை வலுப்படுத்த உதவும் சைவ உணவுகள் மற்றும் நன்மை பயக்கும் அக்ரூட் பருப்புகள், முட்டைகோஸ், நெல்லிக்காய், முருங்கை கீரை மற்றும் வேம்பு பற்றிய தகவல்கள் உள்ளன. நலத்தை மேம்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றியும் தரும் நுால்.
– வி.விஷ்வா