முகப்பு » கவிதைகள் » பொதிகை மலையின்

பொதிகை மலையின் தமிழ்வாசம்

விலைரூ.140

ஆசிரியர் : டாக்டர் மீனாட்சி பரமசிவன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மண்வாசனை கமழும் கவிதைகளின் அணிவகுப்பு நுால். இளமை கால நினைவுகள், இயற்கையோடு இயைந்த வாழ்வு, உறவுகளின் உன்னதத்தை அலங்காரமில்லாமல் வடித்துள்ளது.

‘பருவமடைந்த மேகக் கூட்டம் பகல் இரவாய் கொட்டி தீர்த்தது மழை; வானத்தின் கண்ணீர் எத்தனை பேருக்கு வாழ்வாதாரம்’ என சிந்தனை கூர்மையை உணரலாம். ‘சொந்த ஊரிலே சொக்குர காத்திலே சொக்கநாதன் வந்தா கூட சோம்பேறியா நான் கிடப்பேன்’ என குற்றாலக் குளுமையை படம் பிடிக்கிறது.

‘நாத்தனார், கொழுந்தனார் நிறைந்திருக்க, வீடு என்றுமே நிறைந்திருக்கும்; உன் அடுப்பு எப்பொழுதும் எரிந்திருக்கும்’ என உன்னதத்தைப் பாடுகிறது. பொதிகைத் தென்றலாய் செந்தமிழ் ஊற்றாய் மனதை வருடும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us