இறை, தாய்மை, மொழி, மகாகவி பாரதி, வாழ்வியல், காதல், திருமணம், அழகு, மழைநீர் சேகரிப்பு, பொருளியல் ஏற்றத்தாழ்வு, வறுமை, வளமை என பொருண்மைகளை சொல் ஓவியங்களாகத் தீட்டி எழுச்சி தரும் கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால்.
‘தெய்வத் தமிழாய் பதிகங்களை தந்தபோது தான் உன் சொற்கள் மந்திர வலிமை பெற்றன’ என மொழியின் தெய்வீகத்தையும், ‘மனிதர் இல்லா எல்லா இடங்களுமே மகிழ்ச்சி தான்’ என சமூக அவல உச்சத்தையும் பேசுகிறது.
நேர்மையால் பிச்சைக்காரர் மகாத்மாவாக மிளிர்வதும் பதிவிடப்பட்டுள்ளது. ‘சாதிக்கு சாதி பெரும் புள்ளிகள்’ என சாடுவதும், ‘நம்பிக்கை தருவதில் அகராதியில் ஆண்டவனுக்கு ஐந்தாமிடம்’ போன்ற நிஜங்களை தரிசிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்