புதுக்கவிதை அணிவகுப்பான தொகுப்பு நுால். காதல் சாதி என புதுமை உருவாக்க உணர்த்துகிறது.
காதலை விந்தையாகவும், விதியாகவும் கணையாகவும்,மலராகவும் கண்முன் நிறுத்துகிறது. முதல் கவிதையை மரபின் வடிவத்திலே படைத்துவிட்டு, தொடர்வது எல்லாம் புதுக்கவிதை வடிவத்திற்குள் புகுத்தப்பட்டுள்ளது. எல்லாம் மனிதக் காதலை வெளிப்படுத்தினாலும் கவிஞனுக்குள் தமிழ் காதல் உறைந்திருக்கிறது. இலக்கணம் மீறிய காதலையும் உள்பொதிந்து வைத்துள்ளார்.
ஓடிச் செல்லும் காதலர் வேகத்தைப் புயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. சொற்களும், பொருளும் தொடர் ஓட்டப் பந்தயம் நடத்தினால் மாறி மாறி முந்துவதுபோல் உள்ளன. காதலுக்கு மரியாதை கிடைக்கும்.
– பாண்டியன்