தலைசிறந்த இதிகாசமான ராமாயணத்தை எளிய நடையில் கவிதையாக தந்துள்ள நுால். சிறிய தலைப்புகளில் தனித்தனிப் பகுதிகளாக வடித்து தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தில், ராமனின் வாழ்க்கை நெறி, லட்சுமணன், பரதன் சகோதர பாசம், ராவணன், கும்பகர்ணன் ஆணவம், அனுமன் பக்தி போன்றவற்றை கவிதைகளாக வடித்துள்ளது. முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய ராமனின் அமைதி, தியாகம், விட்டுக்கொடுத்தல், பெற்றோர் சொல்கேட்டல் போன்ற உன்னத குணங்கள் மேன்மையாக சொல்லப்பட்டுள்ளன.
எரிய நடையிலான கவிதைகளில் ராமாயணத்துக்கு உரை போல் அமைந்துள்ளது. எளிய இனிய நடையில் அமைந்து படிக்கும் போது மகிழ்வூட்டுகிறது. பெருங்கதை ஒன்றை, 1,200 வரிகளில் கவரும் வண்ணம் சொல்லும் அற்புத நுால்.
– ஒளி