மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் கலந்த படைப்பு நுால்.
கவிதைக்குக் கடிவாளம் மாட்டாமல் கற்பனைக் குதிரையை ஓட விட்டதால், புதுப்பாதையில் சென்றுள்ளது. தமிழின் இனிமை, எளிமை, அருமை, நுண்மை தன்மைகள் கோர்க்கப்பட்டுள்ளன. தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர், கலைஞர், கவிஞர்களை கண்டறிந்து பாடப்பட்டுள்ளது. எல்லோரும் கொண்டாடி மகிழும் அணிவகுப்பாய் அத்தனை கவிதைகளும் அமைந்துள்ளன.
எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஒரு மின்னல் வெளிப்படுவதைப் போல், சொற்களுக்குள் சுடரேற்றியுள்ளது. அரங்கக் கவிதைபோல் தோன்றினாலும் அடங்காப் பொருட்சுவையை அள்ளித் தருகின்றன. எல்லாத் தரப்பினரையும் கவரும். பல கவிஞருக்கு ஏணியாகும் தொகுப்பு நுால்.
– முகிலை ராசபாண்டியன்