கவிஞர் பாரதியின் புதிய ஆத்திசூடி படைப்பில், 110 வரிகளை தலைப்புகளாக்கி எழுதப்பட்ட நுால். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு பாடுபொருள் அமைந்துள்ளது. புதுமையாக படைக்கும் ஆர்வத்துடன் எழுதப்பட்டுள்ளது.
முதலில், ‘அச்சம் தவீர்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. அதுகுறித்த பொருளை, ‘எட்டு திசை உன் இருப்பு, இரு விழிகள் சிவப்பு, கட்டுக்கரை உனக்கேது’ என எழுச்சி முழக்கமாக எழுப்புகிறது. இதுபோல் பாரதியின் ஆத்திசூடியை தலைப்பாக கொண்டு, சந்தக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன.ஒவ்வொரு கவிதையும், இனிய ஓசை நயத்துடன் அமைந்துள்ளன. எளிய நடையில் உயரிய கருத்துக்களை உணர்த்துகின்றன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ள கவிதை தொகுப்பு நுால்.
– ராம்