இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன். வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:238).
வளர்ச்சியா, வாழ்வா? இன்றைய தேவை வளமையை உயர்த்தும் மரங்கள் - கால்நடைகள் தொழுஉரம், இடைமாடுகள், பஞ்ச கவ்யம், மண்புழு வளர்ப்பும், புழுக்கழிவு உரமும், பசுமை உரங்கள், இயற்கை உரமாக நுண்ணுயிரிகள், மாடியில் காய்கறித் தோட்டம், வனவேளாண்மை, மூலிகைப்பண்ணை என 12 அத்தியாயங்கள் நூலில் வரிசையாக இடம் பெற்றுள்ளன.
ரசாயன உரங்கள், வீரிய விதைகள் பூச்சி மருந்துகளினால், உணவு விஷமானது, நோய்கள் வளர்ந்தன. உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் உள்ளன, காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்கு செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. இயற்கை வேளாண்மைக்கு கால்நடைகளின் பங்கு, போன்ற பல வளமான கருத்துகள் நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கை வேளாண்மைக்கு இந்நூல் ஒரு கையேடு என்பதில் ஐயமில்லை.