நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17. (பக்கம்: 144).
"செல்வம் தரும் தென்னை' எனும் இந்நூல் தென்னை வளர்ப்போருக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் வீணாகப் போகிற குளியல் அறைத் தண்ணீரிலும் தென்னை வளர்க்கலாம் என்று சுட்டிக்காட்டி, பயனற்றவை என மக்கள் கருதும் பொருட்களில் இருந்தும் பயனுள்ள தென்னையை உற்பத்தி செய்வதற்கு வழிகாட்டியுள்ளார். திருவையாற்றில் அமைந்துள்ள தென்னை வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் தென்னை சாகுபடியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் "கோகோஸ்' உர மருந்துக் கலவை மூலம் அதிக பலன் பெறவும் உதவி வருகின்றனராம்.
உங்கள் வீட்டில் தென்னை மரங்கள் உள்ளதா? அல்லது புதிதாக தென்னை வளர்க்க ஆசையா? முதலில் இந்நூலை கையில் வைத்துக் கொள்ளுங்கள். கற்பக விருட்சம் போன்றது இந்த நூலும்.
வாழ்வியல் ரகசியங்கள் வழிகாட்டும் இயற்கை விவசாயப் பண்ணைகள் 300+ இயற்கை விஞ்ஞானி : நூலாசிரியர்: ஆர். எஸ். நாராயணன். காந்தி கிராம அறக்கட்டளை, காந்தி கிராமம். அஞ்சல்- 624 302, திண்டுக்கல் மாவட்டம். (பக்கம்: 212. விலை : ரூ. 75)
தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்நூலில் 314 பேர்களின் விவசாய சாதனைகள், புகைப்படங்கள் இடம் பெற்று படிப்பவர்களை வியக்க வைக்கிறது. மரம் நடுவோம், வனம் வளர்ப்போம், மரமே உரமாதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை, வாழ்வியல் ரகசியங்களாக விளக்கப்பட்டுள்ளன. மரங்களே தெய்வம், வெள்ளைச் சர்க்கரை வேண்டாம், மாடியிலும் தோட்டமிடலாம். மாதுளை பயிரிட்டு, அதை அணில், கிளிகளிடமிருந்து பாதுகாக்க. பக்கத்தில் பப்பாளியை பயிரிட்டு, மாதுளையை காப்பாற்றியது சுவையான தகவல். இப்படி ஒரு மிகவும் பயனுள்ள நூல் இதுவரை வெளிவந்துள்ள மாதிரி தெரியவில்லை.