முகப்பு » மருத்துவம் » Jeevani Ayurveda for women

Jeevani Ayurveda for women

விலைரூ.400

ஆசிரியர் : பி.‌எல்.டி.கிரிஜா

வெளியீடு: சஞ்சீவினி ஆயுர்வேதா பவுண்டேசன்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

பக்கம்: 236     

நூலாசிரியர், சிறந்த ஆயுர்வேத மருத்துவர். சஞ்சீவினி ஆயுர்வேத அறக்கட்டளை மருத்துவமனையில், சிகிச்சை அளித்து வருபவர். தற்போது, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை கோலோச்சி இருக்கும் நிலையில், ஆயுர்வேதம் என்பது  காலம் காலமாக  நிற்கும் சிறந்த வைத்திய முறை, அதைப் பின்பற்றுவது நோயைத் தீர்ப்பதுடன், ஆரோக்கியத்துடன் ஆயுளைத் தரும் என்பதை, ஆதாரங்களுடன் ஆங்கிலத்தில்  முன்வைக்கிறார் ஆசிரியர்.
குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில், தேவைப்படும் உணவு, எளிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை பற்றி, இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன.
காரம் அதிகம் நிறைந்த உணவு, ஊறுகாயை அதிகம் பயன்படுத்தும் போக்கு, ஒரு பெண்ணுக்கு "வாயுதோஷத்தை அதிகரிக்கும். அதே போல, ஐஸ்கிரிம் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. அதனால், மாதவிடாய்  கால உதிரப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார். நெய், பால், அரிசி அல்லது மாமிச சூப்  சாப்பிட்டு, இக்குறையை தவிர்க்கலாம்.
ஐந்து மாத கால கர்ப்பத்தில், நெய் சாப்பிடலாம். அதனால்,  கொலஸ்டிரால் என்ற கொழுப்பு சக்தி அதிகரிக்கும் என்ற கருத்தை ஆதாரத்துடன் நிராகரிக்கிறார் (பக்கம் 52). கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எட்டு முதல் 15 கிலோ எடைவரை  அதிகரிக்க, நெய் உணவில் தேவை என்பதும், இதில் தரப்பட்ட முக்கிய தகவல்.இயற்கையாக பிரசவம் நடக்கவழி, கர்ப்பகாலத்தில் ஏற்படும், சிறுசிறு பிரச்னைகளுக்கு தீர்வு என்று, பல விஷயங்கள் எளிய ஆங்கில நடையில் தரப்பட்டிருக்கின்றன.
கர்ப்பிணி மட்டும் அல்ல,  பொதுவாக மாதவிடாய் காலத்தில்,  பெண்கள் படும் பல்வேறு பிரச்னைகளுக்கும், ஆயுர்வேதம் எளிய தீர்வுகளை தருகிறது. அதற்கான சில எளிய மருந்துகள், நடைமுறை சிகிச்சைகளும் தரப்பட்டிருக்கின்றன. அதே போல, தண்ணீர் அளவுக்கதிகமாக தேவையின்றி குடிக்க வேண்டாம் என்று (பக்கம் 167)ல் விளக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை பராமரிப்பு பற்றியும், குறிப்பாக  சிறந்த ஆயுர்வேத மருந்துகளில் "புஷ்யானுக சூர்ணம் என்ற எளிய ஆனால், அபூர்வ  மருந்து எந்த அளவில், மாதவிடாய் நிற்கும் காலத்தில், பெண்கள் படும் தவிப்பை  போக்கும் என்ற கருத்தும், ஆசிரியரின் சிறந்த அணுகுமுறைக்கு அடையாளம் ஆகும்.தாய்மைப் பேறை அடையும்  அல்லது அடைய விரும்பும் அனைவரும் இந்த நூலைப் படித்து பயன்பெறலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us