பயிற்சி வழியாக மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு கற்பிக்கும் நுால். உடலின் முழு ஆற்றலை உணர்ந்து, பயனுள்ள வகையில் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.
பற்றற்ற நிலை வேறு, தியான நிலை வேறு; இல்லறத்தில் இருப்பவனும் தியானம் செய்யலாம் என்கிறது. விளக்கு பூஜை கூட ஒரு வகை தியானமே என்பதை விளக்குகிறது. தியானத்துக்கான படிநிலைகள், காலம், இடம் வரையறுத்து தரப்பட்டுள்ளது.
உணவு பழக்கம், தியான பயிற்சி முறைகள், மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தியானத்தை அன்றாட கடமையாக்க வலியுறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்